ஆடிவேல் விழாவை சிறப்பிப்பதற்காக பக்தி இசை நிகழ்ச்சி 30/ 7/ 2026 மாலை 6:30 மணியளவில் ம்பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடைபெறவுள்ளன.
இந்த பக்தி இசை நிகழ்ச்சியில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் பிரபல பின்னணி பாடகர் சாய் விக்னேஷ், விஜய் டிவி சூப்பர் சிங்கர் பாடகர் வெற்றியாளர் ஸ்ரீதர் சேனா, ஜீ தமிழ் சரிகமப வெற்றியாளர் சுசந்திகா, ஜீ தமிழ் சரிகமப லக்ஷனா மற்றும் வர்ஜா ஆகியோர் கலந்து கொள்வார்கள். நம் நாட்டின் பிரபல இசை குழுவான ரட்னம் ரட்னதுரையின் ரட்னம்&பேன்ட் இசை வழங்குவார்கள்.
நாட்டுக்கோட்டை நகரத்தார் ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி ஆலய அறங்காவலர் சபைத்தலைவர் ராஜேந்திரன் செட்டியார் (JP) அவர்களின் தலைமையிலான ஆலய அறங்காவலர் சபையினர் பக்தி இசை நிகழ்ச்சியில் அடியார்களை கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றார்கள்.
– எச்.எச்.விக்கிரமசிங்க

