நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’ (Baththa) திரைப்படம் குறித்த புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘பத்தா’ படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.
இப்படம் வரும் அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெகு விமர்சையாக வெளியாகவுள்ளது.
இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பிரபல நடிகை லிஜோ மோல் ஜோஸ் (Lijomol Jose) முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை ‘சினி ஒன் ஸ்டூடியோஸ்’ (Cine One Studios) மற்றும் ‘ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டூடியோஸ்’ (A For Apple Studios) நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். முன்னதாக, இப்படத்தில் சாய் அபயங்கரின் குரலில் வெளியான “செல்லமே மகளே” பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

