வரலாற்றில் இல்லாத அளவு எல் நினோ தாக்கம் – ஐநா வழங்கிய அவசர அறிவுறுத்தல்!

0
8

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் இலங்கையில் வழக்கத்தை விட அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு எச்சரித்துள்ளது.

எல் நினோ காலநிலை மாற்றத்தின் விளைவாகவே இந்த நிலைமை ஏற்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் புதிய அறிக்கையின்படி, ஒக்டோபர் மற்றும் நொவம்பர் மாதங்களில் ஏற்படும் இரண்டாம் இடைப்பருவப் பெயர்ச்சி மழை மற்றும் டிசம்பர் முதல் பெப்ரவரி வரையிலான வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காலத்தில் இலங்கைக்கு அதிக மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த எல் நினோ நிகழ்வுகளில் ஒன்றாக இது பதிவாகக்கூடும் என்றும், இது 2027 ஆம் ஆண்டு வரை நீடிக்கலாம் என்றும் FAO தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, இலங்கையில் பெரும் வெள்ளப்பெருக்கு மற்றும் விவசாயப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளதால், உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ய உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

எரிபொருள், உரம் மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றத்திற்கு மத்தியில், இந்த நிலவரமானது 2026 இன் பிற்பகுதியிலும் 2027 இலும் உணவுப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here