ரயில்வே திணைக்களத்தில் நிலவி வரும் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் புதிய ரயில்வே பொது முகாமையாளரை உடனடியாக நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
அவ்வாறு தாம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவி சாய்க்காவிடின் எதிர்வரும் செம்டம்பர் 17ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ள வகையில் வேலை நிறுத்தப் போராட்டம் நிச்சயமாக இடம்பெறும் என இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

