மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்திய ஆண் குழந்தை!

0
8

ஆந்திர மாநிலத்தில் 4.6 கிலோவிற்கும் அதிக எடையுடன் ஆண் குழந்தை ஒன்று சுகப்பிரசவத்தில் பிறந்த அபூர்வ நிகழ்வு மருத்துவர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது!

பொதுவாக 3.5 கிலோவிற்கு மேல் எடையுள்ள குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலமே பிரசவிக்க முடியும் என்ற மருத்துவ விதியை உடைத்து இந்தச் சாதனை நிகழ்ந்துள்ளது.

ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம் துனி அரசு மருத்துவமனையில் சீதாராம்புரம் பகுதியைச் சேர்ந்த அனிதா என்ற பெண்ணிற்கு 4.615 கிலோகிராம் எடையில் ஆரோக்கியமான ஆண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்தது.

மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பு மற்றும் முயற்சியால் இந்த இயல்பான பிரசவம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. வழக்கமான எடையை விட இருமடங்கு எடையில் பிறந்த இந்தக் குழந்தையை, மருத்துவர்களும் செவிலியர்களும் ஆச்சரியத்துடன் ‘பாலபீமன்’ என்று அன்போடு அழைத்து மகிழ்ந்தனர்.

துனி அரசு மருத்துவமனை வரலாற்றிலேயே இவ்வளவு அதிக எடையில் சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்தது இதுவே முதன்முறை என்பதும், தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here