மகனுக்காக சிறைக்கு சென்ற தந்தை

0
9

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயளாலரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸவை பார்ப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர்
நாமல் ராஜபக்ஷவின் கைது பழிவாங்கும் செயலாக இருக்கவும் கூடும் அல்லது இல்லாமலும் போகலாம்.

எதிர்வரும் தினங்களில் நீதிமன்றத்தின் ஊடாக பிணை பெறுவதற்கு எதிர்பார்க்கிறோம். அரசியல் தலைவராக இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு நாமல் இதற்கு முன்னரும் முகங்கொடுத்துள்ளார். இது எமக்கு புதியதொரு விடயம் அல்ல.

இந்த கைதினால் கட்சிக்கு எந்தவித பின்னடைவும் ஏற்படாது. இது கட்சி முன்னோக்கி நகர்வதற்கான ஒரு விடயம் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here