
வடக்கு காசாவில் ‘மஞ்சள் கோடு’ பகுதிக்கு அருகில், ஹமாஸ் அமைப்பின் துப்பாக்கிச் சூட்டாளராக அடையாளம் காணப்பட்ட பாலஸ்தீனர் ஒருவரைத் தமது படைகள் சுட்டுக் கொன்றுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
அச்சுறுத்தலை அகற்றும் நோக்கிலேயே 99 ஆவது பிரிவைச் சேர்ந்த துருப்புக்கள் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக டெலிகிராமில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இஸ்ரேலிய இராணுவம் உரிமை கோரியுள்ளது.
அதேவேளை, அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததில் இருந்து, இஸ்ரேலிய படைகளின் தாக்குதலில் 1,259 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், 2023 ஒக்டோபர் முதல் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் கொடூரமான போரில், இதுவரை காசாவில் குறைந்தது 73,387 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 1,74,257 பேர் காயமடைந்துள்ளதாகச் சுகாதார அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
