பெக்கோ சமனின் பல மில்லியன் சொத்துக்கள் முடக்கம்

0
5

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க என்பவருக்குச் சொந்தமானதாக கூறப்படும் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் மற்றும் வங்கிப் கணக்குகளை முடக்குவதற்கான உத்தரவை பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு பிறப்பித்துள்ளது.

குறித்த உத்தரவு ஒக்டோபர் 5 ஆம் திகதி முதல் 14 வேலை நாட்களுக்கு செல்லுபடியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அச்சொத்துக்களில் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான அதிசொகுசு பென்ஸ் ரக கார் ஒன்றும், இரண்டு தனியார் வங்கிகளில் உள்ள 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு நிலையான வைப்புக்கணக்குகளும் அடங்குகின்றன.

நிமந்தி பொன்சேகா என்ற பெண்ணின் பெயரிலேயே குறித்த சொத்துக்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சி.டபிள்யூ. விக்ரமசேகரவின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here