கொழும்பு புறக்கோட்டை இந்து இளைஞர் நற்பணி மன்றத்தால் 15 ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வரும் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள் கையளிப்பு நிகழ்வும், விபுலானந்த கல்லூரி மற்றும் அதனை அண்மித்த பாடசாலைகளின் மாணவர்களுக்கான இலவச மாபெரும் கருத்தரங்கும் எதிர்வரும் 12-ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு கொழும்பு தெமட்டகொடை விபுலானந்தா கல்லூரியில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் மாதிரி வினாத்தாள்களை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பித்திருந்த கொழும்பு மற்றும் வத்தளை பகுதிகளைச் சேர்ந்த பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பொறுப்பாசிரியர்கள் அன்றைய தினம் நிகழ்வில் கலந்து கொண்டு தமது பாடசாலைக்கான வினாத்தாள்களை பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


