பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் குடியேற்றவாசிகளின் வன்முறை!

0
7

பாலஸ்தீன கிராமமான குஸ்ராவில் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் பாலஸ்தீனியர்களின் வீடு ஒன்றை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, அங்கு இஸ்ரேல் ராணுவமும் எல்லைப் பொலிஸாரும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

டஜன் கணக்கான வன்முறையாளர்கள் பாலஸ்தீனிய வீடொன்றிற்குள் தங்களை அடைத்துக் கொண்டதாகவும், அங்கு நடத்தப்பட்ட கல்வீச்சு தாக்குதலில் பெண் ஒருவர் உட்பட பல பாலஸ்தீனியர்கள் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர், வீட்டை முற்றுகையிட்ட வன்முறையாளர்களை அப்புறப்படுத்தி அவர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், மேலதிக அசம்பாவிதங்களைத் தடுக்க பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து அங்கு நிலைநிறுத்தப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், சம்பவ இடத்தில் இருந்த இஸ்ரேலியப் படையினர், வீட்டிற்குள் முடக்கப்பட்டிருந்த பாலஸ்தீனியர்களையே கைது செய்ய முயன்றதாக குஸ்ரா கிராம மேயர் அப்துல் அஸீம் வாடி குற்றஞ்சாட்டியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here