பல பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் 3 வாகனங்களுடன் கைது: கடவத்தை பொலிஸார் நடவடிக்கை

0
7

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்த நபர் ஒருவர் 3 மோட்டார் சைக்கிள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கடவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் போது பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், தடுப்புக்காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
களனி பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் அசங்க அவர்களின் வழிகாட்டலில், கடவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் புத்திக ராஜபக்ஷ தலைமையிலான பொலிஸ் குழுவினர் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here