நீர்கொழும்பு குடாபாடுவ கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 535 கிலோகிராம் பீடி இலைத் தொகுதியை இலங்கை கடற்படையினர் இன்று (ஆகஸ்ட் 11) கைப்பற்றியுள்ளனர்.
மேற்கு கடற்படை கட்டளையின் ‘இலங்கை கடற்படைக் கப்பல் கெளனி’ நிறுவனத்தின் சிப்பாய்கள் மேற்கொண்ட இத்தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட 14 பைகள் பரிசோதிக்கப்பட்டன.
கடற்படையினரின் தீவிர நடமாட்டம் காரணமாக கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட நிலையிலேயே இந்த பீடி இலை மூட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட பீடி இலைத் தொகுதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


