நீதித்துறையின் சுயாதீனத்தில் கைவைப்பதா? – சஜித் கொந்தளிப்பு!

0
8

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தைச் சீர்குலைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன், ஒரே கட்சியின் ஆட்சியை நிறுவுவதற்கே அரசாங்கம் முனைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உயர் நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,’ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாகக் கூறி அதிகாரத்திற்கு வந்த அரசாங்கம், தற்போது நீதித்துறை மற்றும் சட்டத்தின் ஆட்சியை அச்சுறுத்தும் வகையில் அரசியலமைப்பு மாற்றங்களை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார்.

அத்துடன் மக்கள் சந்திக்கும் வேலையின்மை மற்றும் தொழில்துறைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விடுத்து, அதிகாரத்தைக் தக்கவைப்பதிலேயே அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.

இந்தத் திருத்தம் மக்களின் இறையாண்மையைப் பாதிப்பதால், இது நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையுடன் மட்டுமன்றி, மக்கள் தீர்ப்பு (Referendum) மூலமாகவும் ஒப்புதல் பெறப்பட வேண்டும்’ என வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here