திலீபனின் தற்காலிக சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்து லண்டனில் போராட்டம்!

0
4

யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள திலீபன் நினைவாலய சதுக்கத்தில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் தற்காலிக சிலை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து லண்டனில் விசேட கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

“பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் ‘தமிழீழ சுயநிர்ணயத்திற்கான இயக்கம்’ (MSDTE) இப்போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

லண்டன் ’10 டவுனிங் ஸ்திரீட்’ பிரதமர் இல்லத்திற்கு அருகில் ஆரம்பமான இப்போராட்டப் பேரணி, பிரித்தானிய வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தை (FCDO) நோக்கி நகர்ந்தது.

திலீபனின் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு நல்லூர் நினைவாலய இடத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக சிலை, கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி பொலிஸாரால் அகற்றப்பட்டது.

சிலை அகற்றப்பட்டதைத் தொடர்ந்து நல்லூரில் போராட்டங்கள் வெடித்ததுடன், பொதுமக்கள் தொடர்ந்து நினைவிடத்திற்கு வருகை தந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இச்சிலை அகற்றப்பட்டதைக் கண்டிப்பதுடன், இது குறித்து பிரித்தானிய அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் நோக்கிலேயே இந்த லண்டன் போராட்டம் நடத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இலங்கையில் நினைவேந்தல் உரிமைகளுக்கு ஏற்படும் தடைகள் குறித்து சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கும் முயற்சியாக இப்போராட்டம் பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here