தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கு இலங்கைக்கான ஜேர்மன் பிரதி உயர்ஸ்தானிகர் Sarah Hasselbarth விஜயம் ! ! ! 

0
13

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை முருகன் ஆலயத்தினை தொல்பொருள் இடமாக அடையாளப்படுத்திய இடங்களுக்கு நேரடி கள விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான ஜேர்மன் பிரதி உயர்ஸ்தானிகர் அங்கு காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாகவும் . உண்மைத்தன்மை தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியனின் வேண்டுகோளுக்கமைய இலங்கைக்கான ஜேர்மன் பிரதி உயர்ஸ்தானிகரின் இந்த விஜயம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் வி.மதிமேனன் , முன்னாள் மாகாண காணி ஆணையாளர் க. குருநாதன் , இலங்கை தமிழரசு கட்சியின் பிரதிநிதிகள் ,ஆலய பரிபாலன சபையினர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here