டெல் அவிவ் விமான நிலையம் அல்லது கட்டிடத்தின் மீது விமானத்தை மோத திட்டமிட்ட விமானி: ஃபிளைதுபாய் (Flydubai) வழக்கில் திடுக்கிடும் தகவல்கள்

0
3

துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்ற ஃபிளைதுபாய் (Flydubai) விமானத்தின் துணை விமானி (Co-pilot), டெல் அவிவில் உள்ள பென் குரியன் விமான நிலையம் அல்லது அங்குள்ள பிரம்மாண்டமான கட்டிடம் ஒன்றின் மீது விமானத்தை மோதி தற்கொலைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த செப்டம்பர் 30 அன்று துபாயில் இருந்து இஸ்ரேல் நோக்கிச் சென்ற FZ1073 விமானத்தில் இந்த பயங்கரவாதத் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானியான ஹமாம் அல்-ஹம்மாமி (Hammad Al-Hammami) என்பவர்தான் இந்தத் தாக்குதலை அரங்கேற்ற முயன்றவர் ஆவார்.

முன் திட்டமிடப்பட்ட சதி: டெல் அவிவ் வழித்தடத்தில் விமானங்களை இயக்கும் நிறுவனங்களைத் தேடிப் பிடித்து, அத்தகைய விமான நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்த பின்னரே இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

“நான் ஃபிளைதுபாய் நிறுவனத்தில் சேர்வதற்கு முன்பே இந்தத் திட்டத்தைத் தீட்டிவிட்டேன். பென்-குரியன் விமான நிலையத்தின் மீது விமான மோதச் செய்வதே எனது இலக்காக இருந்தது” என்று அவர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

முந்தைய முயற்சிகள்: இந்தத் தாக்குதலை அவர் ஜூலை மாதமே நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அந்த விமானப் பணியாட்டுக் குழுவில் தனது நண்பர் ஒருவரும் இடம்பெற்றிருந்த காரணத்தினால் கடைசி நேரத்தில் அதனை ஒத்திவைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் நடைபெற்ற செப்டம்பர் 11 தாக்குதலைப் போல, விமானத்தை ஏதேனும் ஒரு வானுயர்ந்த கட்டிடம் (Skyscraper) அல்லது விமான நிலையத்தின் மீது மோதச் செய்து பெரும் சேதத்தை விளைவிக்க அவர் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here