டெங்கு பரவலைத் தடுக்கும் மற்றும் சமூகத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில், கொழும்பு மாநகர சபையினால் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டமொன்று இன்றைய தினம் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டது.

இதற்காக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் காயத்ரி விக்கிரமசிங்க அவர்கள் உடனடியாகத் தலையிட்டு, உரிய தீர்வை எடுத்து இந்நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்.

இதற்கமைய, கொழும்பு புனித பெனடிக்ட் கல்லூரியின் (ஆரம்பப் பிரிவு மற்றும் மேல் பிரிவு), புனித பெனடிக்ட் மாவத்தை, புனித லூசியஸ் தேவாலயப் பகுதி, புனித லூசியஸ் கல்லூரி 5 ஆம் மற்றும் 6 ஆம் ஒழுங்கைகள் ஆகிய பகுதிகளில் கொசுக்களை ஒழிப்பதற்கான விசேட புகைத்தல் (Fogging) நடவடிக்கைகள் வெற்றிகரமாகக் கொண்டு செல்லப்பட்டன.

இவ்விடயம் தொடர்பாகப் பாடசாலை நிர்வாகம் மற்றும் அப்பகுதி மக்கள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “எமது சமூகத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதிலும், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளிலும் காட்டி வரும் அர்ப்பணிப்பு மற்றும் தொடர்ச்சியான ஆதரவிற்காக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் காயத்ரி விக்கிரமசிங்க அவர்களுக்கும், கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார அதிகாரி (Chief MOH) டாக்டர் ஸ்ரீபிரதாபன், பொதுச் சுகாதாரப் பரிசோதகர் (PHI) ஏ. ரஹுமான் மற்றும் கொழும்பு மாநகர சபையின் பூச்சிக் கட்டுப்பாட்டுப் பிரிவு (Pest Control Unit) ஆகியோருக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


