ஜப்பான் விசா கட்டணங்கள் 5 மடங்கு உயர்வு: ஜூலை 1 முதல் அமுல்

0
4

வெளிநாட்டினருக்கான விசா கட்டணங்களை கணிசமாக உயர்த்துவதற்கு ஜப்பான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த புதிய கட்டண உயர்வு 2026, ஜூலை 1 முதல் அமலுக்கு வரவுள்ளது.

வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, ஜப்பானில் விசா கட்டணம் மாற்றியமைக்கப்படுவது கடந்த ஐந்து தசாப்தங்களில் இதற்கு முன்னர் கடந்த **1978ஆம் ஆண்டிற்குப் பிறகு** இந்தக் கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

விசா பரிசீலனை (Visa processing) மற்றும் குடியேற்ற சேவைகளுக்கான (Immigration services) நிர்வாகச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதை ஈடுகட்டும் நோcrossed கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய கட்டண உயர்வு ஜப்பானுக்குள் நுழைவதற்கு விசா தேவைப்படும் பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

ஜப்பானுக்கு விசா இன்றி பயணிக்கும் அனுமதி (Visa-free access) பெற்ற நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை இது பாதிக்காது.

ஆனால், அவர்கள் ஏதேனும் குறிப்பிட்ட நோக்கத்திற்காக விசா பெற வேண்டியிருந்தால் மட்டுமே இந்த புதிய கட்டணம் வசூலிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here