சட்ட வரைவு தயாரிப்பில் செயற்கை நுண்ணறிவு? இலங்கையில் புதிய திட்டம்

0
3

சட்ட வரைவுகளைத் தயாரிக்கும் நடைமுறையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பான விசேட பயிலரங்கொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் GovTech Sri Lanka ஆகியன இணைந்து “சிறந்த சட்ட ஆக்கத்திற்கான சிறந்த கருவிகள்” என்ற கருப்பொருளில் இந்த பயிலரங்கை ஏற்பாடு செய்திருந்தன.

டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சட்ட வரைபு செயல்பாட்டில் AI தொழில்நுட்பத்தை இணைப்பதற்கான திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.

இதன் முதற்கட்டமாக, ‘மெய்நிகர் சொத்து சேவை வழங்குநர்கள்’தொடர்பான புதிய சட்ட வரைபை தயாரிப்பதில் AI தொழில்நுட்பத்தைப் முன்னோடித் திட்டமாகப் பயன்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும், சட்டங்களை வரைதல், அவற்றை சரிபார்த்தல் மற்றும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஆவணங்களை உருவாக்குவதில் AI கருவிகளின் நடைமுறைப் பயன்பாடுகள் குறித்து இங்கு செய்முறை விளக்கமளிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here