‘க்ளோபல் ஸ்ரீலங்கன் குமரன் குமரி 2026’: ஆஸ்திரேலியாவின் குலன், பிரான்ஸின் சினாதிக்கு மகுடம்!

0
5

உலகின் தனித்துவமான கலாச்சார அழகுப்போட்டிகளில் ஒன்றான ‘க்ளோபல் ஸ்ரீலங்கன் குமர குமாரி 2026’ போட்டியின் இறுதிச்சுற்று மொறட்டுவை, ரமாடியா கிராண்ட் ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது.

இதில் ஆண்களுக்கான பிரிவில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த குலன் திஸாநாயக்கவும், பெண்களுக்கான பிரிவில் பிரான்ஸைச் சேர்ந்த சினாதி லியனகேவும் வெற்றியாளர்களாக மகுடம் சூடினர்.

இப்போட்டியின் முதன்மை அனுசரணையாளரான கண்டி ஸ்பைசஸ் அக்ரோ (தனியார்) நிறுவனத்தின் தலைவரும், கண்டி குழுமத்தின் முகாமைத்துவ இயக்குநருமான கலாநிதி ருவன் ஹேரத் கருத்துத் தெரிவிக்கையில்; “இலங்கையின் செழுமையான பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் சுற்றுலா சாத்தியக்கூறுகளை உலகிற்கு பறைசாற்றுவதே இப்போட்டியின் முக்கிய நோக்கமாகும். ஐக்கிய அரபு அமீரகத்தில் எனது வணிகத்தை வெற்றிகரமாக கட்டியெழுப்பிய பின்னர், தாய்நாட்டிற்கு பயனுள்ள ஒன்றைச் செய்ய விரும்பினேன். இலங்கைக்கான அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதுடன், உள்ளூர் சமூகங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் ஆற்றல் சுற்றுலாத்துறைக்கு உண்டு. உலகின் பல நாடுகளிலிருந்தும் போட்டியாளர்களை ஈர்க்கும் இப்போட்டிக்கு அனுசரணை வழங்குவதன் மூலம், இலங்கையை ஒரு சிறந்த சுற்றுலாத்தலமாக உலகளவில் விளம்பரப்படுத்த முடியும் என நம்புகிறேன்” என்றார்.

இந்நிகழ்வு குறித்து கருத்து வெளியிட்ட ரமாடியா ஹோட்டல் மற்றும் ரொதேஷா குழுமத்தின் தலைவர் ரொஹான் பெர்னாண்டோ; “இப்போட்டி மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. சர்வதேச அளவிலான மாநாடுகள், நிகழ்வுகள் மற்றும் விருந்தோம்பலை சிறப்பாக வழங்கும் முன்னணி இடமாக ரமாடியா ஹோட்டல் உருவெடுத்துள்ளதை இது காட்டுகிறது. இவ்வளவு பெரிய அளவிலான சர்வதேச நிகழ்வை வெற்றிகரமாக நடத்தும் ஆற்றல் எமக்கு உள்ளது என்பதை இது நிரூபித்துள்ளது. உலகத்தரம் வாய்ந்த வசதிகள் மற்றும் விருந்தோம்பலை வழங்கியதில் பெருமையடைகிறோம்” எனக் குறிப்பிட்டார்.

இப்போட்டியின் நிறுவனரும் சர்வதேச இயக்குநருமான வசந்தி குணரத்ன தெரிவிக்கையில்; “13 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் இதில் பங்கேற்றனர். மிகயுயர்ந்த தரத்துடன் நடைபெற்ற இப்போட்டி, இலங்கை கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் திறமைகளை சர்வதேச அரங்கில் வெளிப்படுத்த சிறந்த தளமாக அமைந்தது.

மேலும், உலகெங்கிலும் வாழும் இலங்கையர்களை ஒன்றாக இணைத்து, நமது தேசிய அடையாளத்தை உலகளவில் உயர்த்த இப்போட்டி வழிவகுத்துள்ளது” எனக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here