கொழும்பு போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு

0
5

நுகேகொடை பகுதியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க புதிய திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய இது குறித்து தீவிர கவனம் செலுத்தியுள்ளார்.

நுகேகொடை நகரில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் போதிய வாகன நிறுத்துமிடங்கள் இல்லாத பிரச்சனை குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக, குடியிருப்புப் பகுதிகளில் இயங்கும் தனியார் மேலதிக வகுப்புகள் மற்றும் வீதிகளிலேயே வாகனங்களை நிறுத்துவதால் ஏற்படும் சிரமங்கள் குறித்து அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இதன்போது, நெரிசலைக் குறைக்க 10 முதல் 12 மாடிகளைக் கொண்ட பன்முக வாகன நிறுத்துமிடங்களை அமைப்பது பொருத்தமாக இருக்கும் என அதிகாரி ஒருவர் யோசனை தெரிவித்தார்.

இந்த யோசனையை பரிசீலித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொது வாகன நிறுத்த திட்டம் ஒன்றை உடனடியாக தயாரிக்க முடியுமா என அதிகாரிகளிடம் வினவினார்.

அத்துடன், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் போது வாகன தரிப்பிட வசதிகள் உள்ளதா என்பதை கட்டாயமாக கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது.

ரோயல் கல்லூரி மற்றும் லேடீஸ் கல்லூரி போன்ற கொழும்பின் முன்னணி பாடசாலைகளுக்கு அருகிலும் இதே போன்ற வாகன தரிப்பிடப் பிரச்சினைகள் நிலவுவது இங்கு சுட்டிக்காட்டப்பட்டதுடன், இதற்கான இறுதி முடிவுகள் எதுவும் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here