கொட்டகை அமைப்பதற்கு அனுமதி தருமாறு பலாலி ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாருடன் முரண்

0
10

பலாலியில் இன்றும் (12)
நான்காவது வாரமாக போராட்டம் நடைபெற்றது.

36 வருடங்களாக இராணுவம் கையகப்படுத்தி வைத்திருக்கும் காணிகளை விடுவித்து மக்களிடம் ஒப்படைக்குமாறு கோரி பலாலி மீள்குடியேற்ற அமைப்பு, பலாலி உதயகலைவாணி மக்கள் ஒன்றியம் மக்களை இணைத்து நடாத்துகின்ற அறவழிப்போராட்டம் வழமை போல இன்று (12) வழமை போல பலாலிச் சந்தியில் நடைபெற்றது.

இப்போராட்டம் காலை 8.30 தொடக்கம் நண்பகல் 12.30 வரை நடைபெற்றது காணிகளைப் பறிகொடுத்த மக்கள் தமது காணிகளை விடுவிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வேளை, வெய்யில் காரணமாக கொட்டகை அமைப்பதற்கு அனுமதி தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதன் போது, வீதியின் மறுபக்கம் வர வேண்டாம் என்றும் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என்றும், பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, இரு தரப்பினர்களுக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here