“ஒவ்வொரு அடியும் ஒரு பெரிய போராட்டம்” – ஈரானிய வெளியுறவு அமைச்சர் பதிவு

0
4

அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவிகளின் படத்தையும், உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் படங்களையும் ஒப்பிட்டு ஈரானிய வெளியுறவு அமைச்சர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

கால்பந்து மைதானம் முதல் பேச்சுவார்த்தை மேசை வரையிலும், மற்றும் போர்க்களம் வரையிலும் ஈரானியர்களாகிய நாம் எடுக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு பெரிய போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.

அது நமது அன்பிற்குரிய மக்களின் கௌரவத்தையும் கண்ணியத்தையும் பாதுகாப்பதாகும், என்று அப்பாஸ் அராக்சி (Araghchi) எழுதியுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் நடக்கும் அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்தியஸ்தர்கள் பாராட்டிய அதே வேளையில், பெல்ஜியத்திற்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் ஈரான் டிரா (Draw) செய்த சமயத்தில் இந்த பதிவு வெளியாகியுள்ளது.

அமெரிக்க-இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக நடத்திய போரின் முதல் நாளான பெப்ரவரி 28 அன்று, மினாப் (Minab) நகரில் உள்ள ‘ஷஜாரே தய்யேபா’ பெண்கள் பாடசாலை (Shajareh Tayyebeh Girls’ School) மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் பெரும்பாலான மாணவிகள் மற்றும் அவர்களின் ஆசிரியர்கள் உட்பட சுமார் 160 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here