ஒரே அறையில் அடைக்கப்பட்ட 37 பேர் மூச்சுத்திணறி உயிரிழப்பு

0
9

நைஜீரியாவில் சட்டவிரோத தங்கச் சுரங்கத் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டிருந்த 37 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தில் உள்ள பாதுகாப்புப் படையினரின் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

நோய் பரவல் காரணமாகவே இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இருப்பினும், சிறிய காற்றோட்ட வசதி கூட இல்லாத குறுகிய சிறை அறையில், அளவுக்கு அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டிருந்தமையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டே இவர்கள் உயிரிழந்துள்ளதாகத் தப்பியவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தைக் கண்டித்துப் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், அப்பகுதியில் பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே, இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், நைஜர் மாநில ஆளுநர் மூன்று நாட்கள் துக்கத்தினத்தையும் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here