உலக சந்தையில் எரிபொருள் விலைகள் மீண்டும் உயர்ந்து வரும் போதிலும், அதன் முழுச் சுமையையும் இலங்கை மக்கள் மீது சுமத்த அரசாங்கம் தயாராக இல்லை என அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அத்துடன் இம்மாத இறுதியில் மேற்கொள்ளப்படவுள்ள எரிபொருள் விலை திருத்தத்தின் போது, சாமானிய நுகர்வோரைப் பாதுகாக்கும் வகையில் விலையேற்றத்தின் ஒரு பகுதியை அரசாங்கமே ஏற்றுக்கொள்ள உத்தேசித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களிலும் உலக சந்தை விலை அழுத்தத்தை அரசாங்கம் ஓரளவு தாங்கிக் கொண்டதை சுட்டிக்காட்டிய அமைச்சர், பொறுப்புள்ள அரசாங்கமாக இம்மாத இறுதியிலும் மக்களுக்கான நிவாரணத்தை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

