ஈரான் எப்போது வேண்டுமானாலும் ஒப்பந்தத்திற்கு வரலாம் – ஜோர்தான் தாக்குதல் குறித்து டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!

0
8

அமெரிக்கப் படைகள் மீது ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தினால், அதற்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

Fox News ஊடகத்திற்கு அளித்த செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு ஜோர்தானை நோக்கி ஈரான் ஏவிய அனைத்து ஏவுகணைகளும் அமெரிக்காவால் வெற்றிகரமாக இடைமறித்து அழிக்கப்பட்டன.

ஆபத்தை ஏற்படுத்தாத ஒரேயொரு ஏவுகணை மட்டுமே விலக்கப்பட்டதாக ட்ரம்ப் கூறினார்.

ஜோர்தானில் உள்ள அமெரிக்கப் படைகள் அல்லது இலக்குகள் மீது ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தும் பட்சத்தில், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் அமெரிக்காவுடன் ஒரு சமரச ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளத் துடித்துக் கொண்டிருப்பதாக ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஈரானின் ‘லாராக்’ தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாகவே, ஜோர்தானில் உள்ள அமெரிக்க விமானப் படைத்தளத்தை இலக்கு வைத்து ஈரான் இந்த ஏவுகணைத் தாக்குதலை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here