ஹோர்முஸ் நீரிணை வழியே பயணித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் ‘அட்னாக்’ (ADNOC) அரசு எண்ணெய் நிறுவனத்திற்குச் சொந்தமான இரு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் கூறி சவுதி அரேபியா கடுமையாகக் கண்டித்துள்ளது.
இத்தாக்குதலை ஒரு “அபாயகரமான தீவிரப்போக்கு” மற்றும் சர்வதேசக் கடல்சார் போக்குவரத்துக்கும் உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கும் விடப்பட்ட “நேரடி அச்சுறுத்தல்” எனக் குறிப்பிட்ட சவுதி வெளியுறவு அமைச்சகம், இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு ஈரானே முழுப் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை மாலை ஹொர்முஸ் நீரிணையைக் கடந்து சென்றபோது தங்களின் இரண்டு கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளானதை ‘அட்னாக்’ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இருப்பினும், நிலைமை உடனடியாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக அமீரக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச்சம்பவத்திற்கு ஐக்கிய

