ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோ இணைந்து வழங்கும் புதிய திரைப்படம் ‘அழகிய லைலா’.
இந்தத் திரைப்படத்தில் இளைய திலகம் பிரபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்!
முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படமாக உருவாகும் இந்தப் படத்தில், முன்னணி நடிகர் நடிகைகள் பலர் ஒன்றிணைகின்றனர்.
இப்படத்தில் கதாநாயகியாக அப்சரா ராணி நடிக்கிறார். அவருடன் யோகி பாபு, தம்பி ராமையா, விடிவி கணேஷ், கிங்ஸ்லி, சரத், பூவையார் எனப் பெரிய நகைச்சுவை பட்டாளமே களமிறங்குகிறது.
C.சத்யா இசையமைக்க, வினோத் பெருமாள் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.மதியழகன் மற்றும் ஆரத்தி இருவரும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.
கேரளாவைச் சேர்ந்த இயக்குனர் ரெஜித், தமிழத் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகும் முதல் படம் இதுவாகும்.
“என் தந்தைக்கும் எனக்கும், என் மகன் விக்ரம் பிரபுவுக்கும் ஆதரவு அளித்தது போல, வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு இந்த மலையாள படக்குழுவினருக்கும் தங்களது முழு ஆதரவை வழங்க வேண்டும்” என நடிகர் பிரபு நெகிழ்ச்சியுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

