இலங்கையின் பல பாகங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

0
4

கொழும்பு

நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் இன்று (22) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மழை பெய்யக்கூடிய பகுதிகள்
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள் ,காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்கள்
மேற்குறிப்பிட்ட பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னரே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
பலத்த காற்று வீசும்
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பொதுமக்களுக்கான அவசர அறிவுறுத்தல்!
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் ஏற்படக்கூடிய விபத்துக்களைத் தவிர்த்துக் கொள்வதற்கும், தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here