இலங்கைப் பொருளாதாரத்தில் நல்லாக்கம் – இரண்டாம் காலாண்டில் 4.2% வளர்ச்சி!

0
10

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 4.2 சதவீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.03 டிரில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது.

தொழில்துறை துறையில் ஏற்பட்ட 7.3 சதவீத வலுவான வளர்ச்சியே இதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

நெல், தேயிலை மற்றும் இறப்பர் உற்பத்தி சரிவடைந்ததால் விவசாயத் துறை 2.3 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இருப்பினும், கட்டுமானத்துறை 13.9 சதவீதமும், சுரங்கத் துறை 17.4 சதவீதமும் அபார வளர்ச்சி கண்டு தொழில்துறையை உயர்த்தியுள்ளன.

அதேநேரம், தகவல் தொழில்நுட்பம், நிதிச் சேவைகள் மற்றும் போக்குவரத்துத் துறைகளின் பங்களிப்பால் சேவைத் துறையும் 2.7 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here