‘ஆக்ரோ ஹார்வெஸ்ட்’ (Agro Harvest) குழுமத்தினால் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல் டிப்ளமசி’ (Institute of International Diplomacy) கல்வி நிறுவனத்தின் அங்குரார்ப்பண விழா நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது.
இந்தக் கல்வி நிறுவனத்தின் ஊடாக சர்வதேச தூதரக உறவுகள், மானுடவியல், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டங்கள், கணினி குற்றவியல் சட்டங்கள், சட்டக் கல்வி மற்றும் விவசாய மேம்பாடு ஆகிய பாடநெறிகள் கற்பிக்கப்படவுள்ளதாக ஏ.எச்.சி (AHC) குழுமத்தின் தலைவரும், சமாதான தூதுவருமான கலாநிதி நாலக சில்வா தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மனித உரிமை மேம்பாட்டுக்கான சர்வதேச குரல் அமைப்பின் ரகு இந்திரகுமார் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், அழைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


