ஆசியாவின் பெரும் கோடீஸ்வரர் பட்டியலில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இந்திய தொழில் அதிபர் கௌதம் அடானியை முந்தி, டிக்டொக் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜாங் யிமிங் ஆசியாவின் முதல் பணக்காரராக உருவெடுத்துள்ளார்.
ப்ளூம்பெர்க் பணக்காரர்கள் பட்டியலின்படி, பைட்டான்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான 43 வயதான ஜாங் யிமிங் அவர்களின் சொத்து மதிப்பு 105.5 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் 104.8 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் இருந்த கௌதம் அடானியை அவர் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் சமூக வலைத்தளத் துறையின் அபரிமிதமான வளர்ச்சியே இம்மாபெரும் மாற்றத்திற்கு முதன்மை காரணமாகும்.
‘டூபோ’ (Doubao) சாட்பாட் மற்றும் ‘சீடான்ஸ்’ (Seedance) வீடியோ உருவாக்க கருவி என பைட்டான்ஸ் நிறுவனம் ஏஐ துறையிலும் தடம் பதித்து வருகிறது.
பிளெக்ரொக், ஃபிடிலிட்டி போன்ற முன்னணி முதலீட்டு நிறுவனங்களின் மதிப்பீடுகளுக்குப் பிறகு, செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஜாங்கின் சொத்து மதிப்பு 12 பில்லியன் டாலர்களுக்கும் மேல் அதிகரித்துள்ளது.
2019-ஆம் ஆண்டில் வெறும் 13 பில்லியன் டொலர்களாக இருந்த இவரது சொத்து மதிப்பு, அமெரிக்காவில் பல்வேறு சட்ட ரீதியிலான நெருக்கடிகளைத் தாண்டியும் இன்று 8 மடங்குக்கும் மேல் உயர்ந்து ஆசியாவின் உச்சத்தைத் தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
