ஆசிய விளையாட்டு விழா மகளிர் ரி20 கிரிக்கெட் ஜப்பானை இலகுவாக வென்றது இந்தியா

0
10

ஜப்பானுக்கு எதிராக கொரோஜி ஸ்போர்ட்ஸ் பார்க் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (18) காலை நடைபெற்ற கடைசி கால் இறுதிப் போட்டியில் 8 விக்கெட்களால் இந்தியா வெற்றிபெற்றது.

இந்த வெற்றியுடன் நடப்பு சம்பியன் இந்தியா, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள 20ஆவது ஆசிய விளையாட்டு விழாவுக்கான மகளிர் ரி20 கிரிக்கெட் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் பங்களாதேஷை சந்திக்கவுள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்பான் 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 57 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

ஆரம்ப வீராங்கனைகள் அயாக்கா காட்டோ – ஸ்டஃபர்ட் 25 ஓட்டங்களையும் ஹருணா இவாசாக்கி 10 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்கள் இருவரும் ஆரம்ப விக்கெட்டில் 24 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

ஆனால் அடுத்த 33 உங்களுக்கு சகல விக்கெட்களும் வீழ்த்தப்பட்டன.

பந்துவீச்சில் ஸ்ரீ சரணி 10 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஷஃபாலி வர்மா 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 5 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 59 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஷஃபாலி வர்மா 40 ஓட்டங்களுடனும் ரிச்சா கோஷ் 12 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here