அமெரிக்கா – ஈரான் இடையே பேச்சுவார்த்தை அவசியம்: சீனா வலியுறுத்தல்!

0
3

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச சட்டங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அனுமதியின்றி விதிக்கப்படும் ஒருதலைப்பட்சமான பொருளாதாரத் தடைகளை சீனா கடுமையாக எதிர்ப்பதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்துள்ளார்.

இராணுவ பலப் பிரயோகம் மற்றும் நெருக்குதல் உத்திகள் பதற்றத்தை அதிகரிக்குமே தவிர, யாருடைய நலனுக்கும் உதவாது என எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட தரப்பினர் பொறுப்புடன் செயல்பட்டு, பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாலோசனைகள் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என சீனா கோரிக்கை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here