கொழும்பு முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம போதைப்பொருளுடன் கைது

0
5

கொழும்பு மாநகர சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உட்பட இருவர் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மிரிகான பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்கு அருகில் வைத்து நேற்று இரவோடு இரவாக மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே மஹிந்த கஹந்தகம கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருடன் கைது செய்யப்பட்ட மற்றைய நபரும் இந்த போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுகிறது.

சந்தேகநபர்களிடமிருந்து ‘ஐஸ்’ போதைப்பொருள் கையிருப்பு கைப்பற்றப்பட்டுள்ளதுடன், முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் (CCD) மேற்கொள்ளப்பட்ட இந்த கைதைத் தொடர்ந்து, சந்தேகநபர்களிடம் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here