‘ஆமாம், நான் கருப்புதான்’: உருவக் கேலி விமர்சனங்களுக்கு இயக்குநர் அட்லீ பதிலடி!

0
6

திரையுலகில் குறுகிய காலத்தில் முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ள இயக்குநர் அட்லீ, தனது நிறம் மற்றும் தோற்றம் குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கும், உருவக் கேலிக்கும் (Body Shaming) தனது உறுதியான பதிலடியைக் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “ஆமாம், நான் கருப்புதான். இதை நான் பெருமைக்காகச் சொல்லவில்லை. என்னுடைய தோற்றத்தையும் நிறத்தையும் வைத்து என்னை விமர்சனம் செய்பவர்களுக்கு என்னோட பதில்.. என்னோட படம் தான். இது என்னுடைய அடையாளம்” என்று தைரியமாகத் தெரிவித்துள்ளார்.

தனது கடினமான காலங்கள் மற்றும் திரையுலகப் பயணத்தில் தனக்கு உறுதுணையாக இருந்தவர்கள் குறித்துப் பேசிய அட்லீ, தொழிலதிபர் ஆனந்த் அம்பானியுடனான தனது நட்பை நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

தான் திரையுலகில் போராடிக் கொண்டிருந்த காலத்தில் தனக்கு மிகவும் பக்கபலமாகவும் உறுதுணையாகவும் நின்றவர் ஆனந்த் அம்பானி மட்டுமே என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம், உண்மையான நட்பும் ஆதரவும் ஒருவரின் உருவத்தையோ நிறத்தையோ பார்த்து வருவதில்லை என்பதை அவர் உணர்த்தியுள்ளார்.

இணையத்தில் பரப்பப்படும் நிறவெறி மற்றும் உருவக் கேலி கலாச்சாரத்திற்கு எதிராக இயக்குநர் அட்லீ துணிச்சலாகக் குரல் கொடுத்துள்ளதை அடுத்து, திரையுலகினரும் ரசிகர்களும் அவருக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

திறமையாலும் கடின உழைப்பாலும் இந்திய அளவில் பெரிய உயரத்தைத் தொட்டுள்ள அட்லீயின் இந்த நெகிழ்ச்சியான பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here