பாகிஸ்தான்,இங்கிலாந்துக்கு இடையிலான ஒருநாள் முக்கோணத் தொடர் – 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிப்பு!

0
5

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் ஒருநாள் சர்வதேச (ODI) முக்கோணத் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இந்த அணிக்கு குசல் மெண்டிஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், தொடக்க ஆட்டக்காரர் பத்தும் நிஸ்ஸங்க மருத்துவப் பரிசோதனை அறிக்கை அடிப்படையில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவர் முழு உடற்தகுதியை எட்டினால் மட்டுமே அணியுடன் பாகிஸ்தானுக்குப் பயணிப்பார் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் டி20 (T20I) தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இந்த ஒருநாள் முக்கோணத் தொடர் நடைபெறவுள்ளது.

பெத்தும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, கமில் மிஷார, குசல் மெண்டிஸ் (தலைவர்), பவன் ரத்நாயக்க, சஹான் ஆரச்சிகே, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, தசுன் ஷானக்க, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷன, சசிந்து கொலம்பகே, துஷ்மந்த சமீர, அசித பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷங்க மற்றும் எஷான் மாலிங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here