ஐரோப்பிய நாடுகள் தங்களிடம் கையிருப்பில் உள்ள பெருமளவு டீசல் எண்ணெயை சந்தைக்கு வெளியிடுவதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது Truth Social சமூக வலைத்தளப் பதிவில் ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளதுடன், டீசல் கையிருப்பை சந்தைக்கு வெளியிடும் நடவடிக்கை உடனடியாக ஆரம்பிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தில் ஐரோப்பிய நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளதாகத் தெரிவித்துள்ள ட்ரம்ப், அதற்காக அந்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

