‘டோரதி’ ஒரு தலைச்சிறந்த படைப்பு- படக்குழுவினருக்கு தனுஷ் பாராட்டு

0
9

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டோரதி’ (Dorothy) திரைப்படத்தை நடிகர் தனுஷ் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் அவரது 10-வது படமாகும். இதில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பாக, நடிகர் தனுஷ் ‘டோரதி’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு தனது எக்ஸ் (X) தளத்தில் படக்குழுவினரைப் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

“‘டோரதி’ – இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஒரு தலைசிறந்த படைப்பு (Masterpiece).”

இப்படம் மிகவும் துணிச்சலான, உணர்வுப்பூர்வமான மற்றும் தீவிரமான கதைக்களத்துடன் உருவாகியுள்ளது.

படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு நடிகரும் அற்புதமாக நடித்துள்ளனர்.

இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்யும் வகையில் ‘ருத்ரதாண்டவம்’ ஆடியிருப்பதாக அவர் புகழ்ந்துள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here