செம்டம்பரில் இதுவரையில் 107,093 சுற்றுலாப் பயணிகள் வருகை

0
8

செப்டம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் இலங்கைக்கு 107,093 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அண்மைய தரவுகளின்படி, குறித்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 32,536 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளமையுடன், இது மொத்த வருகையில் 30 சதவீதமாகும்.

மேலும், பிரித்தானியாவில் இருந்து 7,906 பேரும் அவுஸ்திரேலியாவிலிருந்து 7,393 பேரும் இக்காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அத்துடன், 2026 ஜனவரி 1 ஆம் திகதி முதல் செப்டம்பர் 20 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 1,642,215 ஆகப் பதிவாகியுள்ளது.

அவர்களில் இந்தியாவிலிருந்து 418,019 பேரும், பிரித்தானியாவில் இருந்து 157,895 பேரும் வருகை தந்துள்ளதாக அவ்வதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here