சொய்சாபுர அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ : ஒருவர் பலி

0
8

மொரட்டுவை, சொய்சாபுர அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியின் ‘C’ பகுதியில் இன்று (23) இரவு திடீர் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

இந்தத் தீ விபத்தில் மூன்று பேர் சிக்கிக்கொண்டதுடன், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மொரட்டுவை தீயணைப்புப் பிரிவினர் 2 தீயணைப்பு வாகனங்களைப் பயன்படுத்தி தற்போது தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

எரிவாயுக் கசிவே இந்தத் தீ விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here