இலங்கை அணிக்கான வெற்றி இலக்கு

0
8

செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கை அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு 266 என்ற வெற்றி இலக்கை இங்கிலாந்து அணி நிர்ணயித்துள்ளது.

போட்டியின், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

ஆரம்பம் முதலே இலங்கை பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் சிரமப்பட்டனர்.

இங்கிலாந்து அணியின் சார்பில் அணித்தலைவர் ஹரி புரூக் அதிரடியாக விளையாடி 69 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 67 ஓட்டங்களைக் குவித்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய ஜோ ரூட் 44 ஓட்டங்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வில் ஜேக்ஸ் 46 ஓட்டங்களையும் பெற்றனர். ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

இலங்கை அணி சார்பில் அறிமுக வீரராக களம் இறங்கிய சசிந்து கொலம்பகே சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தி 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், அசித பெர்னாண்டோ 53 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். மேலும் டில்ஷான் மதுஷங்க, துனித் வெல்லாலகே மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்

சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதன் மூலம் இலங்கை அணி வெற்றி பெற 266 ஓட்டங்கள் தேவையாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here