ஹூதிகள் – சவுதி ஆதரவு படைகள் மோதல் தீவிரம் : செங்கடலைக் கடந்து தப்பியோடும் எமன் நாட்டு மக்கள்!

0
7

எமனில் ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி அரேபியாவின் ஆதரவு பெற்ற படைகளுக்கும் இடையே வெடித்துள்ள கடுமையான மோதல் காரணமாக, ஆயிரக்கணக்கான எமன் நாட்டு மக்கள் செங்கடலைக் கடந்து பாதுகாப்பான இடங்களுக்குத் தப்பியோடி வருகின்றனர்.

எமன் நாட்டின் செங்கடல் கடற்கரைப் பகுதிகள் மற்றும் எல்லைப் பகுதிகளில் ஹூதிகளுக்கும் சவுதி அரேபிய ஆதரவு படைகளுக்கும் இடையே வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.

இந்த திடீர் மோதல் போக்கினால் எமனுக்குள் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்நாட்டிலேயே வேறு இடங்களுக்குச் சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச இடம்பெயர்வு நிறுவனம் (IOM) தெரிவித்துள்ளது.

செங்கடல் மற்றும் பாப் எல்-மந்தேப் (Bab el-Mandeb) நீரிணைப் பகுதிகள் வழியாக சிறிய படகுகளில் ஏறி, ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்பிரிக்க நாடுகளான ஜிபூட்டி (Djibouti) மற்றும் சோமாலிலாந்து போன்ற பகுதிகளுக்கு அகதிகளாக தப்பியோடி வருகின்றனர்.

கடுமையான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மக்கள் சிறிய மரக்கலங்களில் குழந்தைகளுடன் பயணம் செய்யும் புகைப்படங்களும் தகவல்களும் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here