வடக்கு கிழக்கு மாகாண சபைகளை நடத்தி ஜனாதிபதி தமிழ் மக்களின் மனதை வெல்ல வேண்டும் கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா வேண்டுகோள்

0
6

வடக்கு கிழக்கு மக்கள் குறிப்பாக வட கிழக்கு தமிழ் மக்கள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மீது நம்பிக்கையின் விசுவாசமும் கொண்டிருக்கிறார்கள் மேலும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மாகாண சபை தேர்தலை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா அவர்கள் நடத்துவதால் தமிழ் மக்கள் ஜனாதிபதியுடன் மிகுந்த ஆதரவுடன் இருப்பார்கள் என்பது திண்ணம் அத்துடன் இலங்கை இந்தியா பலமடைந்து வருவதுடன் இந்த ஒப்பந்தத்தின்படி மாகாண சபை தேர்தலை நடத்துவதன் மூலம் தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதி நிறைவேற்ற வேண்டும் என்பதை ஜனாதிபதி அவர்களிடம் தமிழ் மக்கள் வேண்டி நிற்கின்றார்கள். சகலருக்கும் சம உரிமை சகல மதங்களும் மதிக்கப்பட வேண்டும். என்ற கொள்கை ஜனாதிபதியிடம் நிறையவே இருக்கின்றது. இந்த வகையில் ஜனநாயக மரபுப்படி மாகாண சபை தேர்தலை நடத்துவது மூலம் மக்களின் மனதை வெல்ல முடியும் குறிப்பாக தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளில் ஒன்றான இந்த மாகாண சபை தேர்தலும் ஒன்றாக விளங்குகின்றது. நிச்சயம் அவர்களது அந்த வேண்டுகோளை ஏற்று மாகாண சபை தேர்தலை நடத்தி நாட்டில் ஜனநாயகதிற்கு வலுவூட்டுவார் என ஜனாதிபதி மீது மக்கள் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். எனவே ஜனாதிபதி இந்த வேண்டுகோளை கருத்தில் கொண்டு விரைவில் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என பாபு சர்மா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here