அஸ்வசும பயனாளிகளின் மீள் சான்றிதழ் செப்டம்பர் 29க்குள் நிறைவு

0
9

அஸ்வசும நலன்புரி நன்மை திட்டத்தின் முதலாம் கட்டத்தில் உள்ள பயனாளிகளின் மீள் சான்றிதழ் வழங்கும் பணிகளை செப்டம்பர் 29 ஆம் திகதிக்குள் நிறைவு செய்வதுடன், அஸ்வசும நலன்புரி சபையின் அங்கீகாரத்துடன் இறுதி பட்டியலை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக அஸ்வசும நலன்புரி சபையின் தலைவர் நிமல் கொட்டவலகெதர தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

செப்டம்பர் 29 ஆம் திகதிக்குள் இறுதி பெயர் பட்டியல் தயாரிக்கும் பணியை நிறைவு செய்து அஸ்வசும நலன்புரி சபையின் அங்கீகாரத்தை பெற்று பெயர் பட்டியலை காட்சிப்படுத்த எதிர்பார்க்கின்றோம்.

மேலும் தகவல்கள் இணைக்கப்பட்டதும் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. மறு சான்றிதழ் வழங்கும் பணியால் பயனாளிகளின் எண்ணிக்கை குறைவடையும் என்று மாத்திரம் கூற முடியாது.

பயனாளிகளின் எண்ணிக்கை குறைவதானது பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் உள்ள அளவுகோல்களின் படியே நடைபெறுகிறது. தன்னிச்சையான நிர்வாக தீர்மானமாக அதனைக் கருதமுடியாது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here