மத்தியக்கால தேர்தலில் குடியரசுக்கட்சி வென்றால் ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 5,000 டொலர் : ட்ரம்ப் அறிவிப்பு

0
8

அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலில் (Midterm Elections) குடியரசுக்கட்சி (Republicans) வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கைப்பற்றினால், நாட்டின் ஒவ்வொரு வயது வந்த குடிமகனுக்கும் 5,000 அமெரிக்க டொலர்கள் (சுமார் ₹4.2 லட்சத்திற்கும் மேல்) “டிரம்ப் டிவிடெண்ட்” (Trump Dividend) என்ற பெயரில் வழங்கப்படும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

டெக்சாஸ் மாகாணம் டாலஸ் நகரில் நடைபெற்ற குடியரசுக்கட்சியின் இடைக்கால தேர்தல் மாநாட்டில் பேசிய டிரம்ப், “நமது அரசின் பொருளாதார வெற்றி மற்றும் வரிகள் (Tariffs) மூலம் அமெரிக்கா அதிகளவில் வருவாய் ஈட்டி வருகிறது.

பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரண்டிலும் குடியரசுக்கட்சி வெற்றி பெற்றால், இந்தத் தொகையை வழங்கும் உத்தரவில் கையெழுத்திடுவேன்” என்று பேசினார்.

ஆனால். இந்த தொகையைப் பெறும் அமெரிக்கர்கள், பணத்தை அமெரிக்காவிற்குள்ளேயே செலவிட வேண்டும் என்ற ஒரே ஒரு நிபந்தனையை டிரம்ப் விதித்துள்ளார்.

அமெரிக்காவில் சுமார் 270 மில்லியன் வயது வந்த குடிமக்கள் உள்ளனர்.

இந்த திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு சுமார் 1.35 டிரில்லியன் டொலர்கள் (Trillion Dollars) வரை செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here