சிரிய வெடிவிபத்தில் 14 பேர் பலி

0
9

சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் உள்ள சர்மாடா (Sarmada) நகருக்கு அருகே ஆயுதங்கள் மற்றும் போர்க் கழிவுகளைச் சேமித்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட தற்காலிக இடம் ஒன்றில் இன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் சுமார் 14 பேர் உயிரிழந்ததுள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த ஆயுதங்களும் போர்க் கழிவுகளும் வேறொரு இடத்திற்கு மாற்றப்படுவதற்கு முன்னர் குறித்த இடத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகப் பாதுகாப்பு சிரியாவின் அமைச்சு தெரிவித்துள்ளது.

சிவில் பாதுகாப்பு மற்றும் தீயணைப்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், அடுத்தடுத்து ஏற்பட்ட வெடிப்புகள் தீயை அணைக்கும் முயற்சிகளுக்குத் தடையை ஏற்படுத்தியதுடன், பல மணிநேரமாக அப்பகுதியிலிருந்து அடர்ந்த புகையும் வெளியேறியது.

ஆரம்பக்கட்ட வெடிப்புக்கான காரணம் என்னவென்று அதிகாரிகள் இதுவரை தெரிவிக்கவில்லை.

சிரிய அரச ஊடகங்களின் தகவலின்படி, இத்லிப் மாகாணத்தில் உள்ள பின்னீஷ் (Binnish) பகுதியிலும் செப்டம்பர் 1 ஆம் திகதி வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று வெடித்ததில் ஐந்து பேர் உயிரிழந்ததுடன் மேலும் சிலர் காயமடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here