கிளிநொச்சியில் ஒன்றரை வயதுக் குழந்தை விபத்தில் பலி!

0
7
an Indian or Asian person laying dead with outstretched hand during COVID-19 or corona virus outbreak

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம், சிவநகர் பகுதியில் வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் ரக வாகனத்தை குழந்தையின் தாத்தா இயக்கிச் செலுத்திய போது, எதிர்பாராதவிதமாக வாகனத்தின் அருகே ஓடிச் சென்ற குழந்தை வாகனச் சக்கரத்தில் நசியுண்டு உயிரிழந்துள்ளது.

இச்சோகச் சம்பவம் இன்று காலை 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் ரூபன் அனாமிகா என்ற ஒன்றரை வயதுடைய பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் எஸ். சிவபாலசுப்பிரமணியம் மரண விசாரணை மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டார்.

இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here