தசுன் ஷானக்க, சரித் அசலங்க மீண்டும் வருகை! – இலங்கை ஒருநாள், டி20 குழாம் அறிவிப்பு!

0
9

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களுக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முன்னாள் தலைவர்களான தசுன் ஷானக்க மற்றும் சரித் அசலங்க மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர்.

ஜனவரி 2024க்குப் பிறகு முதல்முறையாக ஒருநாள் போட்டிக்குத் திரும்பும் முன்னாள் தலைவர் தசுன் ஷானக்க, மத்திய வரிசைக்கு பெரும் பலமாக அமைந்துள்ளார்.

LPL தொடரில் காலி கேலன்ட்ஸ் அணிக்காக 385 ஓட்டங்கள் குவித்து அசத்திய சரித் அசலங்க, டி20 அணிக்குத் திரும்பியதுடன், இத்தொடருக்கான துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் LPL இல் 434 ஓட்டங்களை விளாசி அதிக ஓட்டங்களை குவித்த லஹிரு உதாரவும் டி20 அணியில் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

இரு தொடர்களுக்கும் குசல் மெண்டிஸ் தலைவராகச் செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here