நாட்டில் நிலவும் எல் நினோ காலநிலை மாற்றத்தால் வாழ்வாதாரத்தை இழப்போருக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அரசாங்கம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தலைமையிலான விசேட அமைச்சரவை உபகுழு, எல் நினோ தாக்கத்தால் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டங்கள் குறித்து ஆராய்ந்துள்ளது.
காய்கறி மற்றும் பழச் செய்கைக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும், சந்தையில் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது பாதிப்புக்குள்ளாகியுள்ள 6 மாவட்டங்களில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் தடங்கலின்றி குடிநீர் விநியோகிப்பது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலபோகச் செய்கைக்கான ஆயத்தங்கள் குறித்து செப்டம்பர் 04 ஆம் திகதி விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்படவுள்ளது.
பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களின் செயலாளர்களுடன் விசேட கலந்துரையாடல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், அமைச்சரவை உபகுழு செப்டம்பர் 14 அன்று மீண்டும் கூடவுள்ளது.

